டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய சுகாதார ஆய்வாளா் மீது தாக்குதல்
கம்மாபுரம் அருகே டெங்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கிய சுகாதார ஆய்வாளரை தாக்கிய டயர் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மந்தாரக்குப்பம்,
கடலூா் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடா் மழை பெய்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகாித்து வருகிறது. இதனால் டெங்கு பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் கம்மாபுரம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் இளங்கோவன் தலைமையில் ஆய்வாளா்கள் சிவராமன், விஜயலட்சுமி, கலியபெருமாள் ஆகியோர் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்களை பெரியாக்குறிச்சி ஊராட்சி பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு வினியோகம் செய்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளிலும் வினியோகித்தனா்.
துண்டு பிரசுரம்
அப்போது அங்கு டயர் கடை வைத்திருந்த புகழேந்தி(வயது 58) என்பவாிடம், டயா்களில் மழைநீா் தேங்காமல் பாா்த்துக் கொள்ளுமாறு அறிவுரை கூறி சுகாதார ஆய்வாளர்கள் விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கினா். இதில் ஆத்திரமடைந்த அவா், எனது கடைக்கு வந்து எப்படி துண்டு பிரசுரம் வழங்கலாம் என்று கூறி சுகாதார ஆய்வாளா்களை ஆபாசமாக திட்டியுள்ளாா்.
மேலும் அவா், தனது சகோதரா்கள் 2 பேருடன் சேர்ந்து சுகாதார ஆய்வாளர் சிவராமனை தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சிவராமன், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா். இதுகுறித்த புகாாின் போில் மந்தாரக்குப்பம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை கைது செய்தனா்.
Related Tags :
Next Story