அரியாங்குப்பத்தில் மொபட்டுக்கு தீ வைத்த 2 பேர் கைது


அரியாங்குப்பத்தில் மொபட்டுக்கு தீ வைத்த 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2021 12:03 AM IST (Updated: 7 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

அரியாங்குப்பத்தில் மொபட்டுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரியாங்குப்பம், நவ.7-
அரியாங்குப்பத்தில் மொபட்டுக்கு தீ வைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
இரும்பு வியாபாரி
அரியாங்குப்பம் அடுத்த ஓடைவெளி அனு கார்டன் பகுதியை சேர்ந்தவர் முகமது காசிம் (வயது 48). இவர் அந்த பகுதியில் பழைய இரும்பு கடை வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மொபட்டை முகமது காசிம் நிறுத்தி     வைத்திருந்தார். நள்ளிரவு நேரத்தில் மொபட் திடீரென்று     தீப்பிடித்து எரிந்தது. 
இந்த சத்தம் கேட்டு வெளியே வந்த முகமது காசிம் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மொபட் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது.
2 பேர் கைது
இது குறித்து அரியாங்குப்பம் போலீசில் முகமது காசிம் புகார் அளித்தார். அதன்பேரில்  போலீஸ்     உதவி சப்-இன்ஸ்பெக்டர் அன்பரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 
விசாரணையில், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ், கொம்பாக்கத்தைச் சேர்ந்த விஜய் ஆகியோர் சம்பவத்தன்று முகமதுகாசிம் வீட்டின் அருகே சிகரெட் பிடித்து விட்டு தீயை அணைக்காமல் தூக்கி வீசியுள்ளனர். அது மொபட் மீது  விழுந்து தீப்பிடித்து எரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ், விஜய் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இரவு ரோந்து
அரியாங்குப்பம் பகுதியில் இரவு நேரத்தில் மர்மநபர்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதாகவும், திருட்டு, கொள்ளை போன்ற குற்றசம்பவங்களும் அதிகம் நடப்பதாகவும் பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதை தடுக்க இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீஸ் உயர்அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story