அரூரில் ஓட்டலில் ரூ1¾ லட்சம் திருட்டு


அரூரில் ஓட்டலில் ரூ1¾ லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 7 Nov 2021 12:03 AM IST (Updated: 7 Nov 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

அரூரில் ஓட்டலில் புகுந்த தொழிலாளி ரூ1¾ லட்சத்தை திருடி சென்றார்.

அரூர்:
தர்மபுரி மாவட்டம்‌‌ அரூர் 4 ரோட்டில் உள்ள ஒரு ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலில் தீபாவளி அன்று அதிகாலை 3 மணிக்கு மர்ம நபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த ரூ.1 லட்சத்து 82 ஆயிரத்தை திருடிச் சென்றார். நேற்று முன்தினம் ஓட்டல் உரிமையாளர் கடைக்கு வந்தபோது பணம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 2 நாட்களுக்கு முன்பு பணியில் சேர்ந்த வாணியம்பாடி சேர்ந்த ரிஸ்வான் என்பவர் பணத்தை திருடியது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் அரூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story