வெங்காய விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
காரியாபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி பகுதியில் சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
சின்ன வெங்காயம்
காரியாபட்டி தாலுகா சாலைமறைக்குளம், தேனூர், பெரிய ஆலங்குளம், சொக்கனேந்தல், சித்தனேந்தல், ஆவியூர், அரசகுளம், மாங்குளம் ஆகிய பகுதிகளில் 300 ஏக்கருக்கும் மேல் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
சின்ன வெங்காயத்தை 70 நாட்கள் முதல் 110 நாட்களில் அறுவடை செய்யலாம் என்பதால் சின்ன வெங்காய சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒரு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வரை செலவு ஆகிறது என்றும் நல்ல விளைச்சல் இருந்தால் ஏக்கருக்கு 6 முதல் 8 டன் வரை மகசூல் கிடைக்கும் என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் கவலை
நல்ல விளைச்சல் ஏற்பட்டால் ஒரு ஏக்கரில் 3 லட்சம் வரை மகசூல் கிடைக்கும். இந்நிலையில் தற்பொழுது பெய்த மழை காரணமாக ஓரளவு விளைச்சல் இருந்தாலும், குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்வதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.10 முதல் ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்குமா என்ற கவலையில் விவசாயிகள் உள்ளனர்.
மேலும் ஏராளமான விவசாயிகள் விதைக்காக சேமித்து வைத்த வெங்காயம் முழுவதும் அழுகி விட்டது. வெங்காய விலை வீழ்ச்சியால் விளைச்சல் இருந்தும் செலவழித்த தொகை கிடைக்காமல் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story