தொழிலாளி கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திண்டுக்கல் அருகே தொழிலாளி கொலை வழக்கில் கைதான 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே உள்ள அனுமந்தராயன்கோட்டையை சேர்ந்தவர் ஸ்டீபன். தொழிலாளி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து 12 பேரை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
அதில் சாமியார்பட்டியை சேர்ந்த மன்மதன், அரவிந்த்குமார், மதுரையை சேர்ந்த சக்திவேல், சிவகங்கையை சேர்ந்த சரவணன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து கலெக்டர் விசாகன் உத்தரவின்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story