சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்
விருதுநகர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகர்,
விருதுநகர் அருகே சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேங்கி நிற்கும் மழைநீர்
விருதுநகர் அருகே வரலொட்டி கிராமம் உள்ளது. இங்கிருந்து பாலவநத்தம் வரை செல்லும் சாலையில் நாகம்பட்டி வரை சாலை முற்றிலும் சேதமடைந்து வாகன போக்குவரத்திற்கு ஏற்றதாக இல்லை.
மேலும் நாகம்பட்டியில் உள்ள ெரயில்வே தரைகீழ் பாலத்தில் சிறு மழை பெய்தாலே தண்ணீர் குளம் போல் தேங்கி விடுகின்றது. அந்த பகுதியில் தண்ணீர் வெளியேற வழி இல்லாததால் போடப்பட்ட கான்கிரீட் பாதை சேதமடைந்து கவனிப்பாரின்றி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
வடிகால் பாதை
மேலும் நாகம்பட்டியிலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சேதமடைந்து விழுகின்ற நிலையில் உள்ளது. எனவே இந்த பகுதி பொதுமக்கள், வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை சீரமைக்க வேண்டும்.
அதேபோல ெரயில்வே தரைக்கீழ் பாலத்தில் மழைநீர் தேங்காமல் செல்ல வசதியாக வடிகால் பாதை ஏற்படுத்தவும், சேதமடைந்துள்ள கான்கிரீட் பாதையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வாகன ஓட்டிகளின் சிரமத்தை கருத்தில் கொண்டு வரலொட்டியிலிருந்து நாகம்பட்டி வரை உள்ள சாலையை விரைவாக சீரமைக்கவும் வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story