சேலம் மாவட்டத்தில் இதுவரை கருப்பு பூஞ்சைக்கு 473 பேர் பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சேலம்
கருப்பு பூஞ்சை
சேலம் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதேசமயம், கருப்பு பூஞ்சை நோயாலும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மாவட்டத்தில் கருப்பு பூஞ்சைக்கு இதுவரை 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
450-க்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று, குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சேலம் அரசு ஆஸ்பத்திரியில் 10 பேருக்கும், தனியார் ஆஸ்பத்திரிகளில் சிலரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
473 பேர் பாதிப்பு
கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியாக 14 நாட்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்கு இதுவரை 473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 27-ந் தேதி கருப்பு பூஞ்சைக்கு ஒருவர் பாதிக்கப்பட்டார். அவருக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது, என்றனர்.
Related Tags :
Next Story