லஞ்ச வழக்கில் கைதான போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன்
பெங்களூருவில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
பெங்களூரு: பெங்களூருவில், லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதான இன்ஸ்பெக்டருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
ரூ.10 லட்சம் லஞ்சம்
பெங்களூரு சிக்கஜாலா அருகே செட்டிகெரே கிராமத்தில் வசித்து வருபவர் சிவசங்கர். இவர் அந்த கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒன்றை வாங்கி இருந்தார். ஆனால் அந்த நிலம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே தான் வாங்கிய நிலத்தில் சிவசங்கர் அந்த நிலம் தனக்கு சொந்தமானது என்று பெயர் பலகை வைத்தார்.
அந்த பெயர் பலகையை இன்னொரு தரப்பினர் அகற்றினர். இதுகுறித்து சிக்கஜாலா போலீஸ் நிலையத்தில் சிவசங்கர் புகார் அளித்தார். அப்போது நிலத்திற்கு பாதுகாப்பு அளிக்கவும், இந்த வழக்கை சுமுகமாக முடித்து வைக்கவும் ரூ.10 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ராகவேந்திரா, சிவசங்கரிடம் கேட்டு உள்ளார்.
இன்ஸ்பெக்டர் கைது
அதன்படி 2 தவணையாக ரூ.8 லட்சத்தை சிவசங்கர் கொடுத்து இருந்தார். மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத சிவசங்கர், ராகவேந்திரா மீது ஊழல் தடுப்பு படையில் புகார் அளித்து இருந்தார். கடந்த செப்டம்பர் 18-ந் தேதி ராகவேந்திராவிடம், சிவசங்கர் ரூ.2 லட்சம் கொடுத்தார். அப்போது ராகவேந்திராவை ஊழல் தடுப்பு படையினர் கைது செய்து இருந்தனர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சிறப்பு கோர்ட்டில் ராகவேந்திரா மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுநீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ராகவேந்திராவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அதாவது பிணைய தொகையாக ரூ.2 லட்சம் செலுத்த வேண்டும், சாட்சிகளை அழிக்க கூடாது, ஒவ்வொரு திங்கட்கிழமையும் போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story