கருமந்துறையில் 70 வயது மூதாட்டி பாலியல் பலாத்காரம் வாலிபர் கைது
கருமந்துறையில் மதுபோதையில் 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
பெத்தநாயக்கன்பாளையம்,
மூதாட்டி பலாத்காரம்
சேலம் மாவட்டம் கருமந்துறை பகுதியை சேர்ந்தவர் 70 வயது மூதாட்டி. ஆடு மேய்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர் அங்குள்ள விவசாய நிலத்தில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சண்முகம் (வயது 25) மதுபோதையில் அங்கு வந்தார்.
அவர் திடீரென 70 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்தார். மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய உறவினர்கள் அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் சண்முகம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து உறவினர்கள் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கைது
இதையடுத்து மூதாட்டியின் உறவினர்கள் சண்முகத்தை பிடித்து கருமந்துறை போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து சண்முகத்தை கைது செய்தார்.
கருமந்துறை அருகே மதுபோதையில் 70 வயது மூதாட்டியை 25 வயது வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story