கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து


கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு ரத்து
x
தினத்தந்தி 7 Nov 2021 3:24 AM IST (Updated: 7 Nov 2021 3:24 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து கர்நாடக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுக்கு கோரிக்கை

கர்நாடகத்தில் கொரோனா காரணமாக இரவு நேர ஊரடங்கு மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு இருந்தது. அதன்படி, இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருந்து வந்தது. இதன் காரணமாக இரவு 10 மணிக்கே அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வந்தது. 

பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருப்பதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதால் இரவு நேர ஊரடங்கை திரும்ப பெற வேண்டும் வியாபாரிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இரவு நேர ஊரடங்கு ரத்து

இந்த நிலையில், கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்வது குறித்து நிபுணர்கள் குழுவுடன் அரசு ஆலோசித்தது. நிபுணர்கள் குழுவினரின் பரிந்துரைப்படி கர்நாடகத்தில் இரவு நேர ஊரடங்கை ரத்து செய்து அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.  இதுகுறித்து மாநில தலைமை செயலாளர் ரவிக்குமார் நேற்று முன்தினம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மாநிலம் முழுவதும் இரவு 10 மணியில் இருந்து அதிகாலை 5 மணிவரை அமலில் இருந்து வந்த ஊரடங்கு திரும்ப பெறப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்திருப்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

குதிரை பந்தயம் நடத்த அனுமதி

இதற்கிடையில், குதிரை பந்தயம் நடத்துவதற்கும் கர்நாடக அரசு அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, குதிரை பந்தயத்தில் கலந்து கொள்பவர்கள் 2 முறை கொரோனா தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும். குதிரை பந்தய மைதானங்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயமாகும். அதாவது முகக்கவசம், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது கட்டாயம் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.

Next Story