ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் வருகை


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் வருகை
x
தினத்தந்தி 7 Nov 2021 3:49 AM IST (Updated: 7 Nov 2021 3:49 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் வருகை தந்துள்ளனர்.

திருச்சி:
108 வைணவத்திருத்தலங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவார்கள். ஸ்ரீரங்கம் கோவிலின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சிக்கு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் பலர் வருவார்கள். குறிப்பாக விடுமுறை நாட்களில் வழக்கத்தைவிட கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்தநிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த 3-ந் தேதி 7,187 பேரும், தீபாவளியான 4-ந் தேதி 19,530 பேரும், 5-ந் தேதி 31,759 பேரும் வந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 6-ந் தேதி (நேற்று) 45,708 பேர் வந்துள்ளனர். இதன் மூலம் கடந்த 4 நாட்களில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்த பக்தர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 4 ஆயிரத்து 184 ஆகும்.

Next Story