ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம்
ரேஷன் அரிசி கடத்தியவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திருச்சி:
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் சோதனை சாவடி எண் 2-ல் கடந்த மாதம் 16-ந் தேதி எடமலைப்பட்டிபுதூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமறித்து சோதனை நடத்தினர். அப்போது, காரில் 18 சாக்குமூட்டைகளில் 750 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இது தொடர்பாக இ.பி.ரோடு தேவதானம் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தொடர் விசாரணையில் சுரேஷ் மீது ஏற்கனவே 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளதால் அவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு சுரேசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இதையடுத்து திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுரேஷிடம் குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது. மேலும், மாநகரில் இதுபோல் குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Related Tags :
Next Story