ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்
ரெங்கநாதர் கோவிலில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடங்கியது.
ஸ்ரீரங்கம்:
ஊஞ்சல் உற்சவம்
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நிகழ்வு டோலோத்சவம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டு ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் நேற்று தொடங்கியது.
ஊஞ்சல் உற்சவத்தையொட்டி நேற்று மாலை 5.30 மணிக்கு ரெங்கநாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு மாலை 6 மணிக்கு ஊஞ்சல் மண்டபம் வந்தடைந்தார். அங்கு ரெங்கநாச்சியார் இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை ஊஞ்சல் உற்சவம் கண்டருளுளினார். பின்னர் இரவு 9 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.
மூலவர் சேவை
இந்த உற்சவம் வருகிற 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. ஊஞ்சல் உற்சவ நாட்களில் காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை, காலை 9 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை மூலவர் சேவை உண்டு. மாலை 3 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 8.30 மணிக்கு மேல் மூலவர் சேவை கிடையாது.
Related Tags :
Next Story