திருத்தணி அருகே வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது


திருத்தணி அருகே வாலிபர் அடித்துக்கொலை - 3 பேர் கைது
x
தினத்தந்தி 7 Nov 2021 11:30 AM IST (Updated: 7 Nov 2021 11:30 AM IST)
t-max-icont-min-icon

திருத்தணி அருகே வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தந்தை, 2 மகன்கள் கைது செய்யப்பட்டனர்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஊராட்சி ஒன்றியம் தரணி வராகப்புரம் ஊராட்சியை சேர்ந்த சி.எச். அக்ரஹாரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் சுதாகர் (வயது 28). இவர் குடிபோதையில் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் லோகநாதன் (50) என்பவருக்கும் இவருக்கும் இடையே வீட்டுமனை பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்னர் சுதாகர் குடிபோதையில் லோகநாதன் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டார்.

தகவல் அறிந்ததும் லோகநாதன் அவரது மகன்கள் ஹேமநாதன் (26), பாபு (25) ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று சுதாகரை கைகளால் அடித்ததாகவும், கால்களால் எட்டி உதைத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த சுதாகரை உறவினர்கள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுதாகரின் மரணத்திற்கு காரணமான லோகநாதன், அவரது மகன்கள் ஹேமநாதன், பாபு ஆகியோரை கைது செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Next Story