நெல்லை, தூத்துக்குடி இடையே சிறப்பு விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது


நெல்லை, தூத்துக்குடி இடையே சிறப்பு விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது
x
தினத்தந்தி 7 Nov 2021 10:38 AM GMT (Updated: 7 Nov 2021 10:38 AM GMT)

நெல்லை, தூத்துக்குடி இடையே சிறப்பு விரைவு ரெயில் இன்று முதல் இயக்கப்படுகிறது

தூத்துக்குடி:
நெல்லை-தூத்துக்குடி சிறப்பு விரைவு ரெயில் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது.
சிறப்பு விரைவு ரெயில்
தெற்கு ரெயில்வே மதுரை கோட்டத்தில் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இன்று (திங்கட்கிழமை) முதல் இயக்கப்படுகிறது. நெல்லை- தூத்துக்குடி சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06668) இன்று (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினமும் இயக்கப்படும்.
இந்த ரெயில் காலை 7.35 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு காலை 9.25 மணிக்கு தூத்துக்குடி சென்று சேரும். மறுமார்க்கத்தில் தூத்துக்குடி - நெல்லை சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06667) தூத்துக்குடியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 8.15 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
நெல்லை-செங்கோட்டை
இதேபோன்று நெல்லை- செங்கோட்டை சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06685) நாளைமறுநாள் (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினமும் இயக்கப்படும். இந்த ரெயில் காலை 7 மணிக்கு நெல்லையில் இருந்து புறப்பட்டு காலை 9.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும்.
மறுமார்க்கத்தில் செங்கோட்டை- நெல்லை சிறப்பு விரைவு ரெயில் (வண்டி எண் 06686) செங்கோட்டையில் இருந்து மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு இரவு 8.10 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
திருச்செந்தூர்
இதேபோல நெல்லை- திருச்செந்தூர் விரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06673) நாளைமறுநாள் (புதன்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை தினமும் இயக்கப்படும். இ்ந்த ரெயில் நெல்லையில் இருந்து காலை 7.20 மணிக்கு புறப்பட்டு காலை 9.05 மணிக்கு திருச்செந்தூர் சென்று சேரும்.
மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்- நெல்லை விரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண் 06678) திருச்செந்தூரில் இருந்து மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு இரவு 7.40 மணிக்கு நெல்லை வந்து சேரும்.
மேற்கண்ட ரெயில்கள் அந்த பகுதியில் உள்ள அனைத்து ெரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story