சேதமடைந்த தார்ச்சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
உடுமலை ஜீவாநகரில் சேதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தள
உடுமலை ஜீவாநகரில் சேதடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
உடுமலையில் இருந்து பழனியாண்டவர் மற்றும் ஜீவாநகர் வழியாக கண்ணம்மநாயக்கனூர், மலையாண்டிபட்டினம் உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கிராமப்புரத்தைச் சேர்ந்த பொதுமக்கள் இந்த சாலையின் வழியாக உடுமலைக்கு குறைவான நேரத்தில் வந்து செல்ல முடியும்.
இதனால் அதில் வாகன போக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த சாலையில் முறையான பராமரிப்புகள் மேற்கொள்ளப்படாதால் சேதம் அடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடுமலை பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
வாகன ஓட்டிகள் கோரிக்கை
மழைநீர் செல்வதற்கு வழி இல்லாதலால் சேதமடைந்த சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் அந்த வழியாகச் செல்கின்ற வாகன ஓட்டிகள், நடந்து சென்ற பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். குண்டும்,குழியுமான சாலையை சீரமைத்து தருவதற்கு நடவடிக்கை எடுக்காததால் வாகனங்கள் ஒன்றுக்கொன்று விலகிச்செல்ல முடியாமல் சகதியில் சிக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளது.
எனவே பழனியாண்டவர், ஜீவாநகர் வழியாக கண்ணமநாயக்கனூருக்கு செல்லும் சாலையின் சேதமடைந்த பகுதிகளை சீரமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
Related Tags :
Next Story