சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவு


சாலையில் கொட்டப்பட்டுள்ள  கழிவு
x
தினத்தந்தி 7 Nov 2021 5:38 PM IST (Updated: 7 Nov 2021 5:38 PM IST)
t-max-icont-min-icon

சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவு

தளி, 
உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட ராமசாமி நகர் வழியாக அரசு கலைக்கல்லூரி, ஆர்.டி.ஓ.மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்வதற்காக சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலை வழியாக உடுமலை நகருக்குள் குறுகிய காலத்தில் வந்து செல்ல முடியும் என்பதால் பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அதில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் ராமசாமிநகர் பிரதான சாலையின் ஓரத்தில் குப்பைகள், இறைச்சி, பிளாஸ்டிக் கழிவுகள் மர்ம ஆசாமிகளால் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகிறது. அதை முறையாக அகற்றுவதற்கும் குப்பைகளை கொட்டுவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை.
இதனால் அந்தப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசி வருவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் குப்பை கழிவுகள் காற்றின் வேகத்தால் சாலையில் சிதறி வருவதுடன் இறைச்சிக்கழிவுகளை தின்பதற்காக வருகின்ற நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு அங்கும் இங்கும் ஓடி விபத்தையும் ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே ராமசாமிநகர் பிரதான சாலையில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை முழுமையாக அகற்றுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அத்துடன் அங்கு குப்பைகளை கொட்டும் நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story