காய்கறி விலை கடும் உயர்வு


காய்கறி விலை கடும் உயர்வு
x
தினத்தந்தி 7 Nov 2021 8:13 PM IST (Updated: 7 Nov 2021 8:13 PM IST)
t-max-icont-min-icon

காய்கறி விலை கடும் உயர்வு

கோவை

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகி றது. இதனால் தோட்டங்களில் மழைநீர் தேங்கி காய்கறிகள் அழுக தொடங்கி உள்ளன. 

தீபாவளி விடுமுறை காரணமாக காய்கறி பறிக்க போதிய தொழிலாளர்கள் கிடைக்காத நிலை உள்ளது. 

இதனால் கோவை மார்க்கெட்டுகளுக்கு காய்கறி வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதனால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

இது குறித்து கோவை டி.கே.மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகி அப்பாஸ் கூறுகையில், கோவையில் கடந்த சில நாட்களாக காய்கறிகள் விலை உயர்ந்து வருகிறது.


 கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி ரூ.30, கேரட் ரூ.40, பீன்ஸ்- ரூ.60, முருங்கைக்காய் -ரூ.60, கத்திரிக்காய் ரூ.40, மல்லித்தழை ரூ.30-க்கு விற்றது. 

அவற்றின் விலை உயர்ந்து தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ.60, கத்தரிக்காய் ரூ.70, கேரட்-ரூ.60, பச்சை மிளகாய்- ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.50, பீன்ஸ்-ரூ.80, மல்லித்தழை-ரூ.40, முருங்கைக்காய் -ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது என்றார்.

ஆனாலும் கோவை டி.கே. மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், உக்கடம் மார்க்கெட் உள்ளிட்ட மார்க்கெட்டுகளில் மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் நேற்று காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

Next Story