கோவை பொள்ளாச்சி வழித்தடத்தில் 10ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம்


கோவை  பொள்ளாச்சி வழித்தடத்தில் 10ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2021 8:19 PM IST (Updated: 7 Nov 2021 8:19 PM IST)
t-max-icont-min-icon

கோவை பொள்ளாச்சி வழித்தடத்தில் 10ந் தேதி முதல் ரெயில்கள் இயக்கம்

கோவை

கோவை- பொள்ளாச்சி வழித்தடத்தில் வருகிற 10-ந்தேதி முதல் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

பொள்ளாச்சி வழித்தடம்

கோவையை அடுத்த போத்தனூர்-பொள்ளாச்சி இடையே 40 கிலோ மீட்டர் அகல ரெயில்பாதையை மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்து உள்ளன. போத்தனூர்-பொள்ளாச்சி வழித்தடத்தில் கடந்த 17 மாதங்களாக ரெயில்கள் இயக்கப்படவில்லை.

 தற்போது கொரோனா தொற்று குறைந்து உள்ளது. இதனால் பயணிகளின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கோவையில் இருந்து போத்தனூர்- பொள்ளாச்சி வழியாக ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

பழனி- கோவை

கோவையில் இருந்து வருகிற 10-ந் தேதி முதல் தினமும் பகல் 2.10 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் சிறப்பு ரெயில் (06463), போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, கோமங்கலம், உடுமலை வழியாக மாலை 4.40 மணிக்கு பழனிக்கு சென்றடைகிறது.

பழனியில் இருந்து 11-ந் தேதி முதல் காலை 11.15 மணிக்கு புறப்படும் ரெயில் (06462) பகல் 2 மணிக்கு கோவை வந்தடைகிறது. 

பழனியில் இருந்து 10-ந்தேதி முதல் தினமும் மாலை 4.45 மணிக்கு புறப்படும் ரெயில் (06479) இரவு 7.40 மணிக்கு மதுரை சென்றடைகிறது.

கோவை வருகிறது

மதுரையில் இருந்து 11-ந்தேதி முதல் தினமும் காலை 7.20 மணிக்கு புறப்படும் ரெயில் (06480) காலை 10.10 மணிக்கு பழனி சென்றடைகிறது.

கோவையில் இருந்து வருகிற 13-ந் தேதி முதல் தினமும் மாலை 6.15 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா ரெயில் (06419) போத்தனூர், கிணத்துக்கடவு வழியாக இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சி சென்ற டைகிறது. 

பொள்ளாச்சியில் இருந்து 14-ந்தேதி முதல் காலை 7.25 மணிக்கு புறப்படும் ரெயில் (06420) காலை 8.40 மணிக்கு கோவை வருகிறது.

பாலக்காடு ரெயில்

பாலக்காட்டில் இருந்து 14-ந் தேதி முதல் காலை 4.55 மணிக்கு புறப்படும் ரெயில் (06731) பாலக்காடு, புதுநகர், கொல்லங்கோடு, முதலமடை, மீனாட்சிபுரம் வழியாக காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சி சென்றடைகிறது. 

பொள்ளாச்சியில் இருந்து 13-ந்தேதி முதல் இரவு 8.50 மணிக்கு புறப்படும் ரெயில் (06732) இரவு 10.30 மணிக்கு பாலக்காடு சென்றடையும்.
இந்த தகவலை தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது.


Next Story