‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்


‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்
x
தினத்தந்தி 7 Nov 2021 9:09 PM IST (Updated: 7 Nov 2021 9:09 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள்

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தேங்கி நிற்கும் மழைநீர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலை அடுத்த பரசலூர் பகுதியில் பாலாஜி நகர் உள்ளது. இந்த பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தேங்கி கிடக்கும் மழைநீரில் கொசுகள் உற்பத்தியாகின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், மழைநீர் தேங்கி கிடப்பதால் பொதுமக்கள் மட்டுமின்றி வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலாஜிநகர் பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-கிராமமக்கள், பரசலூர்.

வாச்சாங்குளம் தூர்வாரப்படுமா? 

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரை அடுத்த காவனூர் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் வாச்சாங்குளம் உள்ளது. இந்த குளம் தற்போது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது. மேலும், குளம் ஆக்கிரமிப்பில் சிக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் குளத்தை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரமான வாச்சாங்குளம் பராமரிப்பின்றியும், ஆக்கிரமிப்பிலும் சிக்கி உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-இளங்கோவன், காவனூர்.

குண்டும், குழியுமான சாலை

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் மடப்புரம் பகுதி சின்னமேலத்தெரு- சிதம்பரம் கோவில் பத்து சாலைகள் பராமரிப்பின்றி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கின்றன. அதுமட்டுமின்றி சாலையில் உள்ள ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கரடு முரடான சாலையாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கும் செல்லும் மாணவ-மாணவிகளும் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், செம்பனார்கோவில்.

சாலை நடுவே நிறுத்தப்படும் வாகனங்கள்

மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர்-செம்பனார்கோவில் பகுதியில் உள்ள மேலப்பாதி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், சாலையில் நிறுத்தப்படும் வாகனங்களால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களால் உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.

மழைநீர் வடிகால் வசதி வேண்டும்

நாகை மாவட்டம் தெற்கு பால்பண்ணைச்சேரி சிவசக்தி நகரில் அம்மா பூங்கா பகுதியில் மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதனால் அதனை சுற்றியுள்ள டி, டி.சி.நகர், ஆசிரியர்நகர், கணபதி நகர் பகுதியிலும் மழைநீர் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் மழைக்காலங்களில் மேற்கண்ட பகுதிகள் தீவு போல காட்சி அளிக்கிறது. குறிப்பாக தேங்கி கிடக்கும் மழைநீரில் இருந்து விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. மேலும், சாலைகளை மழைநீர் சூழ்ந்து கொள்வதால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி பொதுமக்களும் மிகுந்த சிரமத்துக்குஆளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் வடிகால் வசதி செய்து தர வேண்டும் என்பதே அந்த பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
பொதுமக்கள், பால்பண்ணைச்சேரி.

Next Story