தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தல்


தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 7 Nov 2021 9:16 PM IST (Updated: 7 Nov 2021 9:16 PM IST)
t-max-icont-min-icon

தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

திருவாரூர்:-

தண்ணீர் அதிகமாக செல்வதால் ஆற்றில் குளிப்பதை தவிர்க்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கனமழை

தமிழ்நாட்டில் பரவலாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் 90 சதவீதத்திற்கு மேல் நிரம்பி உள்ளது. இதனால் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் ஆற்றில் குளிக்க செல்வதை தவிர்க்க வேண்டும்.  வெள்ளப்பெருக்கு காலங்களில் தாழ்வான பகுதிகளிலும், நீர்நிலைகளின் இரு கரைகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். மழை, வெள்ள நீர் தேங்கும் இடங்களில் கால்நடைகளை கட்டி வைக்க கூடாது.

அத்தியாவசிய பொருட்கள்

வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு முன்னர் கால்நடைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். பொதுமக்கள் தங்களுடைய ஆதார், குடும்ப அட்டை உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களை நெகிழி (பிளாஸ்டிக்) உறைகளில் வைத்து பத்திரப்படுத்தி கொள்ள வேண்டும். ஆறு, ஏரி, குளங்களில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் ஆறு, ஏரி, குளங்கள் அருகே செல்ல வேண்டாம்.
பேரிடர் காலங்களில் மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, ஒரு வார காலத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் (உணவு வகைகள்), கியாஸ், மண்எண்ணெய், மருந்து, பால் பவுடர், மின் விளக்குகள் மற்றும் உபரி பேட்டரிகள் சுகாதாரத்தை பேணி காக்க தேவையான பொருட்கள் முக கவசங்கள் ஆகிய பொருட்களை பொதுமக்கள் அவசியம் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றி வடகிழக்கு பருவமழை காலத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story