திருவாரூரில் பரபரப்பு குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை


திருவாரூரில் பரபரப்பு குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் கொள்ளை முயற்சி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 7 Nov 2021 9:22 PM IST (Updated: 7 Nov 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர்:-

திருவாரூர் குருதெட்சிணாமூர்த்தி மடத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

குருதெட்சிணாமூர்த்தி மடம்

திருவாரூர் மடப்புரம் பகுதியில் குருதெட்சிணாமூர்த்தி ஜீவசமாதி மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் பூஜைகள் முடிந்து கதவுகள் அடைக்கப்பட்டன. நேற்று காலை வழக்கம் போல் கோவிலை திறப்பதற்காக சென்று பார்த்த போது வாசல் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதனால் அதிர்ச்சி அடைந்த மடத்தின் ஊழியர்கள் உடனடியாக திருவாரூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மடத்தின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சி செய்து இருப்பது தெரியவந்தது. 

விசாரணை

இதனையடுத்து கோவில் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மிகவும் பிரசித்திப்பெற்ற மடத்தில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது திருவாரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story