பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி-லிப்ட் கேட்டு சென்றபோது பரிதாபம்


பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலி-லிப்ட் கேட்டு சென்றபோது பரிதாபம்
x
தினத்தந்தி 7 Nov 2021 9:38 PM IST (Updated: 7 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் பலியானார். அவர் லிப்ட் கேட்டு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

பர்கூர்:
லிப்ட் கேட்டு சென்றார்
பர்கூர் தாலுகா சிவம்பட்டி பக்கமுள்ள எகிலெரியன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சென்றாயன். இவருடைய மனைவி மலர்கொடி (வயது 60). இவர் சொந்த விசயமாக வெளியூருக்கு சென்றார். பின்னர் எகிலெரியன்கொட்டாய்க்கு நடந்து சென்று கொண்டிருந்தார். 
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரிடம் லிப்ட் கேட்டார். இதையடுத்து அவர் மோட்டார் சைக்கிளில் அமர்ந்து தபால்மேடு-மத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
தவறி விழுந்து பலி
மோட்டார் சைக்கிள் பட்லப்பள்ளி கூட்ரோடு பகுதியில் சென்றபோது, மலர்கொடி திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிய நபர் அவர் கீழே விழுந்ததை கவனிக்காமல் சென்று விட்டார்.
அந்த வழியாக சென்றவர்கள் மலர்கொடியை மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மலர்கொடி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story