ராகியில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?- வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்


ராகியில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி?- வேளாண் உதவி இயக்குனர் விளக்கம்
x
தினத்தந்தி 7 Nov 2021 9:38 PM IST (Updated: 7 Nov 2021 9:38 PM IST)
t-max-icont-min-icon

ராகி பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து வேளாண் உதவி இயக்குனர் விளக்கமளித்துள்ளார்.

ஓசூர்:
குலைநோய் தாக்குதல்
ஓசூர் வட்டாரத்தில் ராகி பிரதானமாக பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ராகி பயிரிடப்பட்டுள்ளது. தொடர்மழையால் ஏற்பட்ட ஈரப்பதத்தினால் ராகி பயிரில் தற்போது குலைநோய் தாக்குதல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் ராகி பயிரில் குலைநோய் தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து ஓசூர் வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் விளக்கம் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
விதை நேர்த்தி
ராகியில் குலைநோய் தாக்கத்தால் பயிர் காய்ந்து, எரிந்தது போல் தோற்றமளிக்கும். இந்த நோய் ஏற்பட்டால் பயிர் குட்டையாக வளரும், கருப்பு நிறமுடைய புள்ளிகள் தோன்றி உதிர்ந்துவிடும். கணு கருகல் அல்லது கணுப்பகுதி கருப்பாகி ஒடிந்து விடும். இதை கட்டுப்படுத்த ஒரு கிலோ ராகியை கேப்டான் அல்லது திரம் 4 கிராம் அல்லது கார்பன்டாசிம் 2 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம். 
டோமோனாஸ் உயிரியல் கட்டுப்பாட்டு காரணியை லிட்டருக்கு 2 கிராம் தண்ணீரில் கலந்து பாதிப்பு தென்பட்ட உடனேயே ராகி பயிர் மீது தெளிக்க வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் தருவாயில் தெளிக்க வேண்டும். ட்ரைசைக்ளசோல் 200 கிராம் அல்லது அசாக்சிஸ்ரோபின் 200மி.லி., அப்துகார்பன்டாசிமும் தெளிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story