தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல பஸ் நிலையங்களில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தர்மபுரி:
தீபாவளி விடுமுறை முடிந்து பணிக்கு செல்ல தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை கடந்த 4-ந் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை கொண்டாட வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர். இதற்காக தமிழக அரசு சார்பில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இதுமட்டுமல்லாமல் ரெயில்கள் மூலமும் ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊருக்கு சென்றனர்.
தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். தீபாவளி விடுமுறை முடிந்து நேற்று பொதுமக்கள் பணிக்கு திரும்பினர். இதற்காக அவர்கள் வேலை செய்யும் ஊர்களுக்கு கார்கள், பஸ்கள் மற்றும் ரெயில்கள் மூலம் திரும்பினர். பெரும்பாலான பொதுமக்கள் பஸ்களில் சென்றனர்.
அலை மோதியது
இதன் காரணமாக தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பஸ் நிலையங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. தர்மபுரி புறநகர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, திருப்பூர், பெங்களூரு, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு குடும்பத்துடன் திரும்பினர். பஸ்களில் கூட்டம் அலை மோதியதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாக இருந்தது. மேலும் மக்கள் பெரும்பாலானோர் முககவசம் அணியாமல் வெளியே சென்றது அனைவரையும் முகம் சுழிக்க வைத்தது.
இதேபோன்று தர்மபுரி, மொரப்பூர், பொம்மிடி, பாலக்கோடு உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பல்வேறு வாகனத்தில் அவரவர்கள் பணிசெய்யும் ஊருக்கு சென்றதால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. தொப்பூர் சுங்கச்சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றது.
Related Tags :
Next Story