தீபாவளி முடிந்து வெளியூர் செல்ல கோவில்பட்டி பஸ்நிலையத்தில் குவிந்த பயணிகள்
தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்வதற்காக கோவில்பட்டி பஸ்நிலையத்தில் பயணிகள் குவிந்தனர்.
கோவில்பட்டி:
தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பொதுமக்கள் கோவில்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள சொந்த ஊர்களுக்கு வந்தனர். தீபாவளியை 4 நாட்கள் சிறப்பாக கொண்டாடி முடித்து விட்டு, நேற்று மாலையில் வெளியூர் செல்வதற்காக கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையத்தில் ஆயிரக்கணக்கில் குவிந்தனர். இதனால் பஸ்நிலைய பகுதியில் மக்கள் தலைகளாக காட்சியளித்தது. அரசு பணிமனை மேலாளர் ராஜசேகர் பஸ் நிலையத்தில் இருந்து மதுரை, திருச்சி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்தார். இதேபோன்று தனியார் பஸ்களும் அதிகளவில் இயக்கப்பட்டன. பொதுமக்கள் பஸ்களில் ஏறி வெளியூர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் சுஜித் ஆனந்த், சபாபதி, ராணி, நாக குமாரி, பத்மாவதி மற்றும் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story