பொள்ளாச்சி நகரில் டாஸ்மாக் கடைகள் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
பொள்ளாச்சி நகரில் டாஸ்மாக் கடைகள் முன்பு வைக்கப்பட்ட பேனரால் பரபரப்பு
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சிலவற்றில் அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்யபடுவதாக தொடர்ந்து புகார் வருகிறது.
அதிக விலைக்கு மது விற்பது குறித்து மதுபிரியர்கள் கேள்வி கேட்டால், விற்பனையாளர்கள் முறையாக பதில் அளிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மது விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் அறிவித்துள்ளார்.
இருப்பினும், இதனை டாஸ்மாக் விற்பனையாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் அருகே நேற்று முன்தினம் இரவு சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் மர்ம நபர்கள் பேனரை வைத்துவிட்டு சென்றுள்ளனர்.
அந்த பேனரில், அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலை கேட்டால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள் எனக்கூறி டாஸ்மாக் அதிகாரிகளின் எண்களும், போலீசாரின் எண்களும் அச்சிடப்பட்டுள்ளன. அனைத்து டாஸ்மாக் கடைகள் அருகிலும் சிவப்பு நிறத்தில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Related Tags :
Next Story