ரத்தினகிரி அருகே பால் வியாபாரி கார் மோதி பலி


ரத்தினகிரி அருகே பால் வியாபாரி கார் மோதி பலி
x
தினத்தந்தி 7 Nov 2021 10:42 PM IST (Updated: 7 Nov 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

கார் மோதி பால் வியாபாரி பலி

ஆற்காடு

ராணிப்பேட்டைைய அடுத்த மணியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகமூர்த்தி (வயது 49), பால் வியாபாரி. இவர் நேற்று தனது மனைவி லட்சுமி, 2 மகள்களுடன் தனித்தனியாக 2 மோட்டார்சைக்கிள்களில் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் விநாயகமூர்த்தி தலைமுடி காணிக்கை செலுத்தி, குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். 

பின்னர் அங்கிருந்து மகள்கள் மற்றும் மனைவி ஆகியோருடன் விநாயகமூர்த்தி வீட்டுக்கு புறப்பட்டு வந்து கொண்டிருந்தார். ரத்தினகிரியை அடுத்த தென்நந்தியாலம் அருகே வரும்போது விநாயகமூர்த்தி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது அந்த வழியாக எதிரே வந்த ஒரு கார் திடீரென மோதியது. 

அதில் தூக்கி வீசப்பட்ட விநாயகமூர்த்தி 2 மகள்கள், மனைவி ஆகியோரின் கண் எதிரே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த மனைவி லட்சுமி வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து ரத்தினகிரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story