‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 7 Nov 2021 10:54 PM IST (Updated: 7 Nov 2021 10:54 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

திண்டுக்கல்:

சாலையோரத்தில் கொட்டப்படும் குப்பைகள் 

பட்டிவீரன்பட்டி அண்ணாநகரில் இருந்து வத்தலக்குண்டு செல்லும் சாலையோரத்தில் சிலர் குப்பைகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகளும் அவதிப்படுகின்றனர். எனவே குப்பை கொட்டுபவர்களை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரமேஷ்பாபு, பட்டிவீரன்பட்டி.

போக்குவரத்து நெரிசல்
சின்னமனூர் நகராட்சி 11-வது வார்டு கச்சேரிகாமு தெரு மிகவும் குறுகலான தெருவாகும். இந்த தெருவை மறைத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒரு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர். எனவே அந்த கட்டிடத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.

சேறும், சகதியுமாக மாறிய சாலை
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கோவில்பட்டி 4-வது வார்டில் உள்ள தெருவில் மழைநீர் வழிந்தோட வடிகால் அமைக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பெய்த மழை காரணமாக தெருவில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக அப்பகுதி சாலை சேறும், சகதியுமாக மாறியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைப்பாண்டி, கோவில்பட்டி.

தடுப்புச்சுவர் அமைக்கப்படுமா?
திண்டுக்கல் எம்.வி.எம். அரசு மகளிர் கல்லூரி அருகில் உள்ள ரெயில்வே மேம்பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சிலர் மேம்பாலம் முடிவடையும் இடத்தில் வலதுபுறமாக திரும்பிச்செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே வாகன ஓட்டிகள் அந்த வழியாக செல்வதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-உமாதேவி, ராஜக்காப்பட்டி.

பாதியில் நிறுத்தப்பட்ட சாலை பணி
உத்தமபாளையம் தாலுகா கூடலூர் நகராட்சி 21-வது வார்டில் தார்சாலை அமைக்கும் பணி கடந்த மாதம் தொடங்கியது. முதற்கட்டமாக சாலையில் உள்ள குழிகளை சமன்படுத்தும்பணி நடந்தது. அதன் பின்னர் சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். எனவே விரைவில் தார்சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிரகாஷ், கூடலூர்.

Next Story