செங்கம் அருகே கொடுத்த கடனை கேட்டு அழைத்து செல்லப்பட்டவர் தற்கொலை
செங்கம் அருகே கொடுத்த கடனை கேட்டு அழைத்து சென்றதால் மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
செங்கம்
செங்கம் அருகே கொடுத்த கடனை கேட்டு அழைத்து சென்றதால் மனமுடைந்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வீட்டுக்கு அழைத்து சென்றனர்
செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் காலனியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் கடந்த 2019-ம் ஆண்டு புதுப்பாளையத்தை அடுத்த நாகப்பாடி கிராமத்தைச் சேர்ந்த மணியரசு (45) என்பவருக்கு ரூ.40 ஆயிரம் கடனாக கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த கடனுக்கு அசலும், வட்டியும் கட்டாததை கேட்க நேற்று காலை சங்கர், அவரது உறவினர் சதீஷ் (25) என்பவருடன் நாகப்பாடியில் உள்ள மணியரசு வீட்டுக்கு சென்றுள்ளார்.
வட்டியும், அசலும் கட்டாததால் மணியரசை, சங்கர் சுவை தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. தெரிகிறது. சங்கர் வீட்டுக்கு அழைத்து வரப்பட்ட மணியரசு வீட்டிலிருந்து வெளியே சென்று விஷம் குடித்துவிட்டு மீண்டும் சங்கர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
விஷம்குடித்து தற்கொலை
சிறிது நேரத்தில் மணியரசு மயக்கம் அடைந்துள்ளார். உடனடியாக அவரை, சங்கர் புதுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் மேல்சிகிச்சைக்காக செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி மணியரசு பரிதாபமாக உயிரிழந்தார்.
மணியரசு உடல் பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இறந்த மணியரசுவிற்கு பஞ்சவர்ணம் (11) என்ற மகளும், தமிழ்முருகன் (6) என்ற மகனும் உள்ளனர். தமிழரசுவின் மனைவி பச்சையம்மாள் ஏற்கனவே இறந்துவிட்டார்.
இது குறித்து புதுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கர் மற்றும் சதீஷ் ஆகியோரை கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனைக் கேட்டு அழைத்து வரப்பட்ட மணியரசு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story