மலட்டாறு வெள்ளத்தை சப்-கலெக்டர் பார்வையிட்டார்


மலட்டாறு வெள்ளத்தை சப்-கலெக்டர் பார்வையிட்டார்
x
தினத்தந்தி 7 Nov 2021 11:01 PM IST (Updated: 7 Nov 2021 11:01 PM IST)
t-max-icont-min-icon

மலட்டாறு வெள்ளத்தை சப்-கலெக்டர் பார்வையிட்டார்

பேரணாம்பட்டு

ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மலட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பத்தலபல்லி, மதினாப்பல்லி பகுதி மலட்டாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
மதினாப்பல்லி மலட்டாற்றில் கரையோரத்தில் இருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மற்றும் மும்முனை இணைப்பு செல்லும் 8 மின்கம்பங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.  அப்பகுதியில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் விவசாய நிலங்களுக்கு பாசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. 
டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் அடித்து செல்லப்பட்ட இடங்களை குடியாத்தம் சப்- கலெக்டர் தனஞ்ஜெயன் பார்வையிட்டார். 

அழிஞ்சிகுப்பம், ரெட்டிமாங்குப்பம் பாலாற்று தரைப்பாலம் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் முழுமையாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதையும், மாங்குப்பம் ஏரி, ராஜக்கல் ஏரி ஆகிய ஏரிகள் நிரம்பி கோடி சென்றுள்ளதையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது கரையோர பகுதிகளில் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு வருவாய் துறையினருக்கு அவர் உத்தரவிட்டார். சப்-கலெக்டருடன் பேரணாம்பட்டு தாசில்தார் (பொறுப்பு), ரமேஷ் மண்டல துணை தாசில்தார் வடிவேல், வருவாய் ஆய்வாளர்கள் பஞ்சாட்சரம், தேவேந்திரன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் கோபிநாதன் ஆகியோர் சென்றிருந்தனர்.

Next Story