அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அருணாசலேஸ்வரர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்
அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்
திருவண்ணாமலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு வருகிற 17-ந் தேதி மதியம் 1 மணி முதல் 20-ந் தேதி வரை அருணாசலேஸ்வரர் கோவில் வளாகத்திற்குள் பொதுமக்கள், பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் அந்த நாட்களில் கிரிவலம் செல்வதற்கும் தடை விதிக்கப்படுகிறது.
அனுமதிக்கப்பட்ட இதர திருவிழா நாட்களில் இணையதளம், சிறப்பு மையங்கள் மூலமாக அளிக்கப்பட்ட அனுமதி சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த தகவலை கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story