புலன் விசாரணையை பதிவு செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி


புலன் விசாரணையை பதிவு செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி
x
தினத்தந்தி 7 Nov 2021 11:03 PM IST (Updated: 7 Nov 2021 11:03 PM IST)
t-max-icont-min-icon

புலன் விசாரணையை பதிவு செய்வது குறித்து போலீசாருக்கு பயிற்சி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி நகரம், ஊரகம், குன்னூர், தேவாலா, கூடலூர் ஆகிய 5 காவல் உட்கோட்டங்கள் உள்ளன. இங்கு 27 சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் நிலையங்கள், 5 அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள் என மொத்தம் 36 காவல் நிலையங்கள் உள்ளன. 

போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகள் மற்றும் குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வழக்குகள் குறித்த புலன் விசாரணையை பதிவு செய்ய சிசிடிஎன்எஸ் (கிரைம் மற்றும் கிரிமினம் டிராக்கிங் நெட்வோர்க் சிஸ்டம்) என்ற மென்பொருள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்த மென்பொருளின் நுணுக்கங்கள் குறித்தும், மென்பொருள் பற்றி நினைவூட்டும் பயிற்சிகள் அவ்வப்போது நிலைய எழுத்தர் மற்றும் புலன் விசாரணை அலுவலர்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலைய எழுத்தர் மற்றும் புலன் விசாரணை அலுவலர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் ஊட்டியில் நடந்தது.

 இதில் மென்பொருளில் பெறப்படும் புகார்களை பதிவு செய்வது, வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் குற்றவாளிகளாக உள்ளார்களா, புலன் விசாரணை விவரங்களை பதிவு செய்வது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் போலீசார் தங்களது சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.

Next Story