காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு
காட்டாற்றில் அடித்து செல்லப்பட்ட வாலிபர் 3 நாட்களுக்குப் பிறகு பிணமாக மீட்பு
அணைக்கட்டு
திருவண்ணாமலை மாவட்டம் நம்யம்பட்டு பூவிலாண்டுர் மலை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் பாபு (வயது 25). மலைப்பகுதிகளிலும் மற்றும் ஒடுகத்தூர் பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு பருத்தி விதை விற்பனை செய்துவந்தார். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி பருத்தி விதை விற்பனையை முடித்துக்கொண்டு பீஞ்சமந்தை மலை கிராமத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் பூவிலாண்டுர் கிராமத்திற்கு தொங்குமலை வழியாக சென்றுள்ளார். இரவு நேரம் என்பதால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அறியாமல் கரையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பிறகு தொங்குமலை அடிவாரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதுபற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீசார் சென்று பாபு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story