மல்லிகை பூ விலை ‘கிடு கிடு' உயர்வு


மல்லிகை பூ விலை ‘கிடு கிடு உயர்வு
x
தினத்தந்தி 8 Nov 2021 12:40 AM IST (Updated: 8 Nov 2021 12:40 AM IST)
t-max-icont-min-icon

தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.2,400-க்கு விற்பனையானது.

ஆரல்வாய்மொழி,
தோவாளை மார்க்கெட்டில் மல்லிகை பூ விலை கிடுகிடுவென உயர்ந்தது. கிலோ ரூ.2,400-க்கு விற்பனையானது.
தோவாளை மார்க்கெட்
குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இங்கு விற்பனையாகும் பூக்களை உள்ளுர் மட்டுமில்லாமல் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் வியாபாரிகள் வந்து போட்டி போட்டு வாங்கிச் செல்வது வழக்கம். 
பூக்களின் விலை முக்கிய விசேஷ நாட்கள், பண்டிகை நாட்களில் விலை உயர்ந்தும், மற்ற நாட்களில் விலை குறைந்தும் காணப்படும். மேலும், மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்தை பொருத்தும் விலையில் மாற்றங்கள் காணப்படும். 
மல்லிகை விலை உயர்வு
அதன்படி நேற்று முன்தினம் ரூ.1,200-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.1,200 உயர்ந்து ரூ.2,400-க்கும், ரூ.450-க்கு விற்பனையான பிச்சி ரூ. 200 உயர்ந்து ரூ.650-க்கும் விற்பனையானது. 
இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறுகையில், தொடர்ச்சியாக முகூர்த்த நாள் என்பதாலும், அதே சமயத்தில் மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து குறைவாக இருந்ததாலும் வியாபாரிகள் போட்டி போட்டு பூக்களை வாங்கி சென்றனர். இதனால் பூக்கள் விலை உயர்ந்தது என தெரிவித்தார்.
விலை விவரம்
மார்க்கெட்டில் விற்பனையான மற்ற பூக்கள் விலை விவரம் கிலோவில் வருமாறு:- 
அரளி ரூ.130, முல்லை ரூ.600, சம்பங்கி ரூ.150, கனகாம்பரம் ரூ.700, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.30, தாமரை ஒரு எண்ணம் ரூ.10, கோழிபூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு)ரூ.7, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டம்பு ரோஸ் (ஒரு கட்டு)ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.55, சிவப்பு கேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.80, சிவந்தி வெள்ளை ரூ.150, கொழுந்து ரூ.100, மரிக்கொழுந்து ரூ.120  என விற்பனையானது.

Next Story