தினத்தந்தி புகார் பெட்டி


புதுக்கோட்டை
x
புதுக்கோட்டை
தினத்தந்தி 8 Nov 2021 12:56 AM IST (Updated: 8 Nov 2021 12:56 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் பின்புறம் சித்தர் கோவில் அருகே அய்யனார் கோவிலில் இருந்து ரோஸ் நகர் செல்லும் சாலையில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக குடியிருப்புகளுக்கு  சென்று வருவோர் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சாலையில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
குமரிஅனந்தன், பெரம்பலூர்.

உதிர்ந்துபோன மின்கம்பம் 
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, இனாம் குளத்தூர் பஞ்சாயத்து ஆலம்பட்டி புதூர் வயல்வெளியில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சி அளிக்கிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால்  அப்பகுதியில் மின் தடை ஏற்படுவதுடன் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ஆலம்பட்டிபுதூர், திருச்சி. 

சேறும், சகதியுமான சாலை 
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கருடமங்கலம் ஊராட்சியில் கருடமங்கலம் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும்  வீதி மற்றும் மாரியம்மன் கோவில் அருகிலும் உள்ள வீதிகள் சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் நடந்து செல்லும் முதியவர்கள், மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், கருடமங்கலம், திருச்சி. 
இதேபோல் திருச்சி மாவட்டம் 61-வது வார்டு தஞ்சை ரோடு காட்டூர் வேணுகோபால் நகர் பகுதியில் உள்ள சாலைகள் அனைத்தும் மழை பெய்து சேறும், சகதியுமாகவும், குண்டும், குழியுமாகவும் காட்சியளிக்கிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், காட்டூர், திருச்சி.

காவிரி ஆற்றுப்பாலத்தில் பழுது 
கரூர் மாவட்டம்,  குளித்தலை தந்தை பெரியார் காவிரி ஆற்றுப்பாலத்தில் பள்ளம் ஏற்பட்டு பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆக அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும்போது பாலத்தில் மேலும் சேதம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், குளித்தலை, கரூர். 

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி
புதுக்கோட்டை மாவட்டம், புங்கினிப்பட்டி ஊராட்சி, சத்திய நாதபுரம் 4-வது வார்டில்  உள்ள பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியானது நீண்ட நாட்களாக பயனற்ற நிலையில் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சத்தியநாதபுரம் ,புதுக்கோட்டை.

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, கரியமாணிக்கம் ஊராட்சி, சிறுகாம்பூர் பெரிய மாரியம்மன் கோவில் அருகே குப்பைகள் கொட்டப்படுவதினால் அப்பகுதி குப்பை மேடுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது அப்பகுதி அசுத்தம்போல் காணப்படுவதுடன் அவற்றில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், சிறுகாம்பூர், திருச்சி. 

தூர்வாரப்படாத கழிவுநீர் வாய்க்கால் 
திருச்சி பீமநகர் 48-வது வார்டு புதுரெட்டிதெரு ஓம்சக்தி கோவில் அருகே செல்லும் கழிவுநீர் வாய்க்கால் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதுடன் அதில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் நோய் பரவும் அபாயம்  உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பீமநகர், திருச்சி. 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
அரியலூர் மாவட்டம், மலங்கன்குடியிருப்பு இருளர் தெரு செல்லும் பாதை மற்றும்  குடியிருப்பு பகுதிகளில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகும் நிலை உள்ளது. மழைநீர் தேங்கி நிற்பதினால் அவற்றில் இருந்து கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கவிதா, ஜெயங்கொண்டம், அரியலூர். 

டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் 
திருச்சி வயலூர் சாலையில் உள்ள குமரன்நகர் பேங்கர்ஸ் காலனி 3-வது வீதி விஸ்தரிப்பு பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் செல்ல வழியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதியில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட காய்ச்சல் பரவ அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் மழைநீர் தேங்கி நிற்கும் இடத்தில் மின்கம்பம் உள்ளதால் இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பேங்கர்ஸ் காலனி, திருச்சி. 

குப்பைகளால் சுகாதார சீர்கேடு 
திருச்சி மேலப்புதூர் 47 வது வார்டு  குகைவழிப்பதை அருகில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் மழை பெய்யும்போது அதில் மழைநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மேலப்புதூர், திருச்சி. 

வண்ண முகப்பு விளக்குகள் அமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம், துறையூர்-தம்மம்பட்டி சாலையில் புளியஞ்சோலை பிரிவு சாலை, நரசிங்கபுரம் பிரிவு சாலை, உப்பிலியபுரம்-பச்சை மலை பிரிவு சாலை, உப்பிலியபுரம் -புளியஞ்சோலை, மாசிபெரியண்ணசாமி கோவில் பிரிவு சாலை, கொப்பம்பட்டி-பி.மேட்டூர் மாசி பெரியண்ணசாமி கோவில்  பிரிவு சாலை ஆகிய பிரிவுகளில் பெயர் பலகைகளுடன் கூடிய வண்ண முகப்பு விளக்குகள் பொருத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், துறையூர், திருச்சி. 


Next Story