தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கோவில் காளை மீட்பு
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த கோவில் காளை மீட்கப்பட்டது.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பெரியாக்குறிச்சி கிராமத்தில் இருந்து ஆர்.எஸ்.மாத்தூர் செல்லும் வழியில் திருமாவளவன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலம் மற்றும் வீடு உள்ளது. அங்கே அவர் தரைமட்டத்தில் தண்ணீர் தொட்டி கட்டியுள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு வந்த மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த கோவில் காளை மாடு தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. இது பற்றி தகவல் அறிந்த செந்துறை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தன்ராஜ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அங்கு வந்து பொக்லைன் எந்திரங்கள் மூலம் காளை மாட்டை தண்ணீர் தொட்டியில் இருந்து உயிருடன் மீட்டனர்.
Related Tags :
Next Story