தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம்
தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் ஆலோசனை கூட்டம் நடந்தது.
செங்கோட்டை:
செங்கோட்டையில் தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தென்காசி வடக்கு மாவட்ட செயலாளரும், கடையநல்லுார் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா தலைமை தாங்கினார். ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. பேசுகையில், “விரைவில் நடைபெற உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும் போது கடந்த தேர்தலில் செய்தது போல ஒரு வார்டிற்கு 3 வேட்பாளர்களை தேர்வு செய்து கொடுக்க வேண்டும். தலைமை யாரை அறிவிக்கிறதோ அவர்களை வெற்றி பெற வைக்க வேண்டும். ஒற்றுமை யுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட்டு வெற்றி பெறுவோம்” என்றார்.
கூட்டத்தில் விவசாய அணி துணை செயலாளர் ஆனைகுட்டி பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. துரையப்பா, முன்னாள் தொகுதி செயலாளர் பொய்கை மாரியப்பன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story