பூட்டிய வீட்டில் நகை திருட்டு
பூட்டிய வீட்டில் நகை திருட்டு
திசையன்விளை:
திசையன்விளையை அடுத்த அப்புவிளை சுவாமிதாஸ் நகரை சேர்ந்தவர் ராமநாராயணன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 38). தீபாவளியை கொண்டாடுவதற்காக சென்னையில் உள்ள அவரது மகன், மகள் வீட்டிற்கு செல்வதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார். இந்தநிலையில் அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இது குறித்து அவரது அண்ணன், ஜெயலட்சுமிக்கு தகவல் தெரிவித்தார். சென்னையில் இருந்து வந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. பீரோவில் இருந்த இரண்டரை பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் லிபி பால்ராஜ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகிறார்.
Related Tags :
Next Story