தீபாவளி விடுமுறையில் வந்தவர்கள் ஊர் திரும்பினர்: நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்
நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் 2-வது நாளாக அலைமோதிய கூட்டம்
நெல்லை:
தீபாவளி விடுமுறையில் வந்தவர்கள் ஊர் திரும்பியதால் நெல்லை ரெயில், பஸ் நிலையங்களில் 2-வது நாளாக பயணிகள் கூட்டம் அலைேமாதியது.
ஊர் திரும்பினர்
தீபாவளி பண்டிகை கடந்த 4-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களில் தங்கி இருந்து வேலை செய்யும் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களுக்கு வந்தனர்.
மேலும் தீபாவளியையொட்டி 4 நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டது. இந்த விடுமுறை முடிந்ததால் நேற்று முன்தினம் அவரவர் வசிக்கும் ஊர்களுக்கு புறப்பட்டனர்.
பஸ், ரெயில்களில் கூட்டம்
நேற்று 2-வது நாளாக பெரும்பாலானோர் புறப்பட்டதால் பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பயணிகள் கூட்டம் அதிகளவு இருந்தது. வழக்கமான சிறப்பு ரெயில்கள் மற்றும் தென்காசி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரெயில்களில் இருக்கைகள் நிரம்பி இருந்தன.
இதேபோல் நெல்லை தற்காலிக புதிய பஸ் நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அரசு விரைவு பஸ்கள் மற்றும் புறநகர் பஸ்கள் மதுரை, திருப்பூர், கோவை, சென்னை, திருச்சி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்பட்டன.
சிறப்பு பஸ்கள்
நெல்லை தற்காலிக புதிய பஸ் நிலையத்தில் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் முகாமிட்டு, பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்களை இயக்கினார்கள்.
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் இயக்கப்பட்ட புறநகர் பஸ்கள், பயணிகள் தேவைக்கு ஏற்ப மதுரைக்கு திருப்பி விடப்பட்டன. அதற்கு பதிலாக டவுன் பஸ்கள் தென்காசி, பாபநாசம், தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளுக்கு புறநகர் பஸ்களாக இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story