மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
மோட்டார் சைக்கிள் மோதி காவலாளி சாவு
நெல்லை:
நெல்லை மேலப்பாளையம் கொட்டிகுளம் ரோடு சித்தி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கரன் (வயது 76). இவர் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர் சம்பவத்தன்று மேலப்பாளையம் - அம்பை ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் சங்கரன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.
Related Tags :
Next Story