சென்னையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிப்பு

சென்னையில் இன்று மெட்ரோ ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனம்ழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதியடைந்துள்ளனர்.
இந்நிலையில், கனமழை காரணமாக பயணிகளின் நலன்கருதி சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், மெர்டோ ரெயில்கள் இன்று இரவு 11 மணி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்படுள்ளது. 10 நிமிட கால இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story