கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் இளநிலை 3-ம் ஆண்டு மாணவிகளுக்கு வழிகாட்டும் வகையில், வேலைவாய்ப்பு மன்றத்தின் சார்பில் ஒருநாள் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கம் தொடக்க நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் பொ.ஜெயந்தி தலைமை தாங்கினார். கணினி பயன்பாட்டியல் துறை உதவிப் பேராசிரியர் மா.பபிலா ரேவதி வரவேற்று பேசினார். சென்னை அல்கெமிஸ்ட் பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் எப்ரேம் சேவியர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், நேர்முகத்தேர்வை எதிர்கொள்வது எப்படி? அதற்கான திட்டமிடல் குறித்து விளக்கம் அளித்தார். மாணவிகளுடன் குழு கலந்துரையாடல் நடத்தினார். கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் வழிகாட்டுதல்படி வேலைவாய்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story