கடைக்குள் புகுந்த பாம்பு


கடைக்குள் புகுந்த பாம்பு
x
தினத்தந்தி 8 Nov 2021 7:25 PM IST (Updated: 8 Nov 2021 7:25 PM IST)
t-max-icont-min-icon

நிலக்கோட்டை அருகே பெட்டிக்கடைக்குள் நல்ல பாம்பு புகுந்தது.

நிலக்கோட்டை:

நிலக்கோட்டை அருகே உள்ள சிலுக்குவார்பட்டியை சோ்ந்தவர் ரமேஷ் (வயது 47). இவர், அப்பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். அந்த கடைக்குள், 4 அடி நீள நல்ல பாம்பு ஒன்று புகுந்தது. இதனைக்கண்ட ரமேஷ் அதிர்ச்சி அடைந்து, கடையை விட்டு வெளியேறி அலறினார். 

இதுகுறித்து நிலக்கோட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன்பேரில் நிலைய அலுவலர் ஜோசப் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பாம்பை தேடும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். 

நீண்டநேரமாக அங்குமிங்கும் ஓடிய பாம்பு, கடையின் பின்புறம் உள்ள தண்ணீர் குழாய்க்குள் பதுங்கியது. இதனையடுத்து தீயணைப்பு வீரர்கள், நீண்ட நேரம் போராடி குழாய்க்குள் இருந்த பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

Next Story