கொத்தனார் தற்கொலை


கொத்தனார் தற்கொலை
x
தினத்தந்தி 8 Nov 2021 7:54 PM IST (Updated: 8 Nov 2021 7:54 PM IST)
t-max-icont-min-icon

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால், கொத்தனார் தற்கொலை செய்து கொண்டார்.

சின்னாளப்பட்டி:

சின்னாளப்பட்டி ஜீவா நகரை சேர்ந்தவர் முத்துசாமி. அவருடைய மகன் பிரபு (வயது 19). கொத்தனார். இவர், காதலித்து வந்த ஒரு பெண்ணை கடந்த 15 தினங்களுக்கு முன் தனது வீட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு 18 வயது பூர்த்தி அடையவில்லை. இதனால் பிரபுவிடம் இருந்து பிரித்து, அந்த பெண்ணை அவரது பெற்றோர் அழைத்து சென்று விட்டனர்.

தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியவில்லையே என்ற விரக்தியுடன் பிரபு காணப்பட்டார். இதனால் மனம் உடைந்த பிரபு, நேற்று மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சின்னாளப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story