முழு கொள்ளளவை எட்டிய கண்ணன்கோட்டை நீர்தேக்கம்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்டபட்டது கண்ணன்கோட்டை நீர்தேக்கம். கண்ணன் கோட்டை நீர்தேக்கம் நேற்று பிற்பகல் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்திற்கு உட்டபட்டது கண்ணன்கோட்டை நீர்தேக்கம். சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழவரம் ஆகிய 4 ஏரிகளோடு கண்ணன்கோட்டை நீர்த்தேக்கமும் சேர்க்கப்பட்டுள்ளது. கிருஷ்ணா நதி நீர் வரத்து காரணமாக ஏற்கனவே 90 சதவீதம் நிரம்பி இருந்த கண்ணன் கோட்டை நீர்தேக்கம் நேற்று பிற்பகல் முழு கொள்ளளவான 500 மில்லியன் கன அடியை எட்டியது.
இந்தநிலையில், நீர்த்தேக்கத்திற்கு தொடர்ந்து வரும் நீர்வரத்தானது, இந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலங்கல் மூலமாக உபரி நீராக 60 கன அடி தண்ணீர் வெளியேறி உள்ளதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு கண்ணன்கோட்டை நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேறி வரும் உபரி நீரானது, ஓடைகால்வாய் மூலமாக ஏடூர், எளாவூர், சுண்ணாம்புகுளம் வழியாக பழவேற்காடு ஏரியை சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story