டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை
டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று சுமை பணி தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவாரூர்:
டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று சுமை பணி தொழிலாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சுமை பணி தொழிலாளர் சங்க கூட்டம்
திருவாரூர் சி.ஐ.டி.யூ. அலுவலகத்தில் டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர் சங்கத்தின் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன் கலந்து கொண்டு பேசினார். இதில் நகராட்சி துப்பரவு ஊழியர் சங்கத்தின் தலைவர் ராஜேந்திரன், சங்கத்தின் கிளை தலைவர்கள் துரைராஜ், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
டாஸ்மாக் சுமை பணி தொழிலாளர்கள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, தொழிலாளர் காப்பீட்டு திட்டம் கணக்குகளை சரிவர பராமரித்து நிலுவை இல்லாமல் பணத்தை கட்ட வேண்டும்.
நிர்ணயித்த கூலியை வழங்க வேண்டும்
டாஸ்மாக் மாவட்ட மேலாளர் கிடங்கு செல்லும் சாலையை பழுது நீக்கம் செய்து சிமெண்டு சாலையாக மாற்ற வேண்டும்.
சுமை பணி தொழிலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் நிர்ணயித்த கூலியை ஒப்பந்தக்காரர்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story