ஊத்தங்கரை அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு; 2 பேர் கைது
ஊத்தங்கரை அருகே அரசு பஸ் மீது கல்வீசி, கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஊத்தங்கரை:
அரசு பஸ்
திருப்பத்தூர் அருகே உள்ள தோரணம்பதியை அடுத்த நாயக்கனூரை சேர்ந்தவர் முருகன் (வயது 51). அரசு பஸ் டிரைவர். சம்பவத்தன்று இவர் வேலூரில் இருந்து ஊத்தங்கரை வழியாக சேலத்திற்கு அரசு பஸ்சை ஓட்டி சென்றார்.
பஸ் ஊத்தங்கரை அருகே அனுமந்தீர்த்தம் சாலையில் ரெட்டிப்பட்டி ஜங்ஷன் பக்கமாக சென்று கொண்டிருந்தது. அப்போது 2 பேர் பஸ்சை நிறுத்த கை காட்டினர். ஆனால் பஸ் நிற்காமல் சென்றதாக கூறப்படுகிறது.
2 பேர் கைது
இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் பஸ் மீது கல்லை வீசினார்கள். இதில் அரசு பஸ்சின் பின்பக்க கண்ணாடி உடைந்து சிதறியது. இது குறித்து டிரைவர் முருகன் ஊத்தங்கரை போலீசில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெட்டிப்பட்டியை சேர்ந்த தினேஷ் (21), ராமமூர்த்தி (22) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story