பாலக்கோடு பகுதியில் தொடர் மழை தக்காளி விலை கிடு கிடு உயர்வு
பாலக்கோடு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
பாலக்கோடு:
பாலக்கோடு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக தக்காளி விலை கிடு,கிடுவென உயர்ந்து வருகிறது.
தக்காளி சாகுபடி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் விவசாயிகள் அதிக அளவு தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். பாலக்கோடு, மாரண்டஅள்ளி, வெள்ளிச்சந்தை, பஞ்சப்பள்ளி, காரிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை பிரதானமாக சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் அறுவடை செய்த தக்காளிகளை பாலக்கோட்டில் உள்ள மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வருகின்றனர்.
இங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தக்காளி ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஈரோடு, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் இங்கிருந்து தக்காளியை கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விலை உயர்வு
பாலக்கோடு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து குறைந்தது. இதனால் தக்காளி விலை தினமும் கிடு, கிடுவென உயா்ந்து வருகிறது. பாலக்கோடு தக்காளி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட ஒரு கிரேடு தக்காளி ரூ.1,000 முதல் ரூ.1,200 வரை விற்பனையாகிறது.
கடந்த வாரம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி, தற்போது கிலோ 50 ரூபாய் வரை வெளிமார்க்கெட்டில் விற்பனையானது. தக்காளி விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தக்காளி விலை உயர்வால் தக்காளி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story