பல்லடத்தில் முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர்.


பல்லடத்தில் முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர்.
x
தினத்தந்தி 8 Nov 2021 9:52 PM IST (Updated: 8 Nov 2021 9:52 PM IST)
t-max-icont-min-icon

பல்லடத்தில் முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர்.

பல்லடம், 
பல்லடத்தில் முகூர்த்த நாளான நேற்று கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் சிக்கித்தவித்தனர்.
போக்குவரத்து நெரிசல்
பல்லடம் நகரம் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன், திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை, அவினாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. கோவை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81-ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் சென்று வருகிறது.
திருமணம் போன்ற விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத்தாண்டும். இந்த நிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் கார், மோட்டார்சைக்கிள்களின் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்தது. இதனால் கோவை-திருச்சி மெயின் ரோட்டிலும், மங்கலம் ரோட்டிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அண்ணா நகர் முதல் பனப்பாளையம் தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆயிரக்கணக்கான வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து சென்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தடுப்புகள் வைத்தும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தியும் ரோடுகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல்லடம் திக்குமுக்காடிப்போனது.
ரூ.45 கோடி நிதி
இந்த நிலையில் வாகன போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், விபத்துகளை குறைக்கவும், புறவழிச்சாலை, அல்லது சுற்றுவட்டச்சாலை அமைக்க வேண்டும் என்று பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர். புறவழிச்சாலை திட்டத்திற்கு கடந்த பிப்ரவரி மாதம் அரசு நிர்வாக அனுமதி வழங்கி நிலம் கையகப்படுத்த, ரூ.45 கோடி  நிதி ஒதுக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. ஏற்கனவே இந்த திட்டத்திற்கு ரூ.44.50 லட்சம் செலவில் நிலம் சர்வே செய்து திட்ட மதிப்பீட்டு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
பல்லடம் புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் அப்போதைய முதன்மை செயலாளர் அரசாணை வெளியிட்டார். இதன் மூலம் பல்லடம் நகர் பொதுமக்களின் நீண்ட கால போக்குவரத்து நெருக்கடி பிரச்சினைக்கு தீர்வு ஏற்படும் என்று பொதுமக்கள் எதிர்பார்த்தனர். 
 பொதுமக்கள் எதிர்பார்ப்பு
ஆனால் இதன் பின்னர் புறவழிச்சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வராமல் கிடப்பில் உள்ளது. எனவே ஏற்கனவே திட்டம் தயாரிக்கப்பட்டு, நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ள பல்லடம் நகரின் புறவழிச்சாலை திட்டத்தை புதிய அரசும், திருப்பூர் மாவட்ட நிர்வாகமும் விரைவாக நடவடிக்கை எடுத்து பல்லடம் நகரின் போக்குவரத்து நெரிசலை தீர்க்க வேண்டும் என்று பல்லடம் பொதுமக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

Next Story